வணக்கம்

அன்னையெம் தமிழை எண்ணிடும் போது ஆனந்தக்காற்று நெஞ்சிலெழும் முன்னவர் முகங்கள் தோன்றிடும் போது மூச்சினில் வீறு பொங்கியெழும்! என்னதவம் யாம் செய்தோமோ? எத்தனை பிறவிகள் எடுத்தோமோ? தன்னிகரில்லாத் தாய்மொழியோடு தரணியில் வந்து தவழ்ந்தோமே இன்னொரு பிறவி எடுப்போமோ?- மீண்டும் செம்மொழிச் சேயாய்ப் பிறப்போமோ? பன்னெடுங்காலம் பரவிய இனத்தின் பரம்பரை யாமென உரைப்போமோ? மன்னரும் கொடியும் மண்ணுடன் அரசும் கொண்டவர் குடியிற் பிறந்தோமே! தின்னவும் குடிக்கவும் தெருவினில் அலையும் அந்நிய நிலங்களை அடைந்தோமே! கண்களிற் குருதி வடியுதடா! கவலையில் நெஞ்சு துடிக்குதடா! எங்களின் வாழ்வில் எமக்கொரு காலை எப்பொழுதோதான் விடியுமடா?
தமிழவை பற்றிய ஒரு விபரக் கோவை
புலவர் நல்லதம்பி சிவநாதன்
தமிழவையின் வேட்டலும் வேட்கையும் வேணவாவும் தனக்கான தனித்துவ விழுமியச் செழுமையும் நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியமும் மரபுச் செம்மையும் கொண்டு…. புலம்பெயர்ந்து வந்த ஓரினமக்கள்…. உலக சமுதாயத்தின் சனநாயக விழுமியங்களையும் மனிதநேயத்தின் மாண்புகளையும் மதித்துப் போற்றிப் பேணவல்ல தேசமாம்… ‘பிரித்தானிய மண்ணில்’…. ஒரு பல்லினக் கலாச்சாரச் சூழலிலும் கூட… தமக்கான அடையாளத்துடனும்… அங்கீகாரத்துடனும் நிலைத்து… உயிர்ப்;புடன் வாழமுடியுமென்ற நம்பிக்கையுடன்… பல்லாயிரம் ஆண்டுகளுக்கான தொன்மைகொண்ட….. உலகச் செம்மொழியையும்….. எழுத்துச் சுவடிகளுக்குள் அகப்படாத…. தமிழர்தொல்குடி வரலாற்றுப் பெருமையையும் பேணிப் பாதுகாக்கவல்ல…. உலகத் தமிழருக்கான ஒரு தமிழ் விருட்சமாகத் ‘தமிழவை’ என்ற அமைப்பு நிறுவப்பட வேண்டும்”எனும் பெருங்கனவோடு…. 1999ஆம் ஆண்டு கோடைகால மாதங்களில் புலவர் சிவநாதனதும் அவரது துணைவியார் பிள்ளைகளினதும் சொந்த இல்லத்தின் பின்வளவில் ஒரு நீளசதுர செங்கற்கட்டவடிவினில் வடிவமைப்புப்பெற்றது!
புலவர்

நல்லதம்பி சிவநாதன்

Image

இந்த உணர்ச்சிக்குமுறலுக்கு மத்தியிலும் தன்மொழியின் இனத்தின் உயர்வுகளை உறுதியுடன் கூறுவதன் வழியாகவே தன் சந்ததி தாம் வாழும் நாட்டில் தமிழராக வாழ வேண்டும் என்று நினைப்பவன் தமிழ்ப்படைப்பாளி. அத்தகைய ஒரு உன்னதமான அயலகத் தமிழ்ப்படைப்பாளி தான் பெரும் புலவர் என்று ஐரோப்பாவே கொண்டாடும் புலவர் நல்லதம்பி சிவநாதன். இவர் இலங்கையும் இந்தியாவும் முதுதமிழ்ப் புலவர் எனப் போற்றிய புலவர் நல்லதம்பி அவர்களின் இளைய மகன். திருநெல்வேலித் தமிழ்ச்சங்கமே “முது தமிழ்ப்புலவர்’ என்ற பட்டத்தை இவரின் தந்தைக்கு வழங்கியது. இவரின் தந்தையே இலங்கையின் தேசிய கீதத்iதைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.

மேலும்

நாட்டிய அரங்கம்

தமிழவையின் புகைப்படத் தொகுப்பு

வில்லிசை

தமிழவையின் புகைப்படத் தொகுப்பு

கவியரங்கம்

தமிழவையின் புகைப்படத் தொகுப்பு

கருத்தரங்கம்

தமிழவையின் புகைப்படத் தொகுப்பு

நாட்டிய நாடகம்

தமிழவையின் புகைப்படத் தொகுப்பு

காணொளி

தமிழவையின் புகைப்படத் தொகுப்பு

ஒலிபரப்பு

தமிழவையின் புகைப்படத் தொகுப்பு

புகைப்படங்கள்

தமிழவையின் புகைப்படத் தொகுப்பு

A Profile of Pulavar Nallathamby (Siva) Sivanathan

A Profile of Pulavar Nallathamby (Siva) Sivanathan

BSc (Civil Eng.) FCIOB FaPS FCABE TechIOSH AssocRICS - Senior Construction Design Management Consultant and Founder and Patron of Thamizhavai, London Building Safety Regulator (BSR) Scheme Registered Class 1 Building…

மேலும்

தமிழவை 25 வெள்ளிவிழா மகிழ்ச்சிப் பெருவிழா

தமிழவை 25 வெள்ளிவிழா மகிழ்ச்சிப் பெருவிழா கால்நூற்றாண்டுக்காலம் தடம்பதித்து இவ்வாண்டு-2024இல் வெள்ளிவிழாக் காணும் தமிழவையின் கலை கவிதை இலக்கியப் பயணம் ஈட்டிய வாழ்த்துரைகளில் ஒரு சில உரைமணிகள் 1. தமிழவையின் நிறுவனர் காப்பாளர் புலவர் நல்லதம்பி சிவநாதன் அவர்களின் அகவுரை 2.…

மேலும்
தமிழவை பற்றிய ஒரு விபரக் கோவை1

தமிழவை பற்றிய ஒரு விபரக் கோவை1

‘தமிழவை’ – 1974அம் ஆண்டில் பூத்து விரிந்த ஒரு புலவனின் கனவு: “ஒரு பல்லினக் கலாச்சாரச் சூழலிலும் கூட… ஓரினம் தனது அடையாளத்துடனும்… அங்கீகாரத்துடனும் இப்பூகோள முகத்தில் நிலைத்து… உயிர்புடன் வாழமுடியுமென்ற நம்பிக்கையுடன் உலக சமுதாயத்தின் சனநாயக விழுமியங்களையும் மனிதநேயத்தின் மாண்புகளையும்…

மேலும்
நவீன யமன் தர்பார் (கூத்து-இசைநாடக வடிவில்)

நவீன யமன் தர்பார் (கூத்து-இசைநாடக வடிவில்)

நவீன யமன் தர்பார்: ‘காலதேவனின் சட்ட சபையில்’‘வாசாப்பு’ இசைநாடக மரபினையும் நாட்டுக்கூத்து மரபினையும் இணைத்த இந்த அரங்க நாடகப் படைப்பு…1980-90களில் எமது தாயக மக்களின் விடுதலை வேட்கையினையும் அவர்கள் வடித்த கண்ணீரையும் செந்நீரையும் பிரிதிபலிக்கின்ற ஓர் அரங்கப் படைப்பாக்கமாக வல்தம்ஸ்ரோ தமிழ்ப்பாடசாலை…

மேலும்
புலவர் சிவநாதனின் நாடகவியல் ஆக்கங்களும்…

புலவர் சிவநாதனின் நாடகவியல் ஆக்கங்களும்…

புலவர் சிவநாதனின் நாடகவியல் ஆக்கங்களும் அரங்க வானலைத் தயாரிப்புகளும் தாயகத்த்pல்… வட்டுக்கோட்டையிலும் சுன்னாகம் கந்தரோடைஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கொழும்பு மாநகரிலும் கிளிநொச்சி உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலிலும் வேர்கொண்டு கிளைவிட்ட வட்டூர்ப் பங்கயமணாளனின் நாடகவியல் அரங்காற்றுகை படைப்பாக்க ஆளுமை அனுபவங்களும் கதாப்பிரசங்கழ் வில்லுப்பாட்டு ஆகிய…

மேலும்
அன்பே தமிழ்! அதிலே அமிழ்

அன்பே தமிழ்! அதிலே அமிழ்

‘அன்பே தமிழ்! அதிலே அமிழ்!’ ‘ஆன்றோர் அறிவும் சான்றோர் சால்பும் தோன்றாத் துணையாய்க் கொண்டது அவையே!’ -இலண்டன் தமிழவை ‘மெய்ப்பொருள் காண்போம்; மேதினி சிறக்க’ செல்லரித்துக் கிடந்த செந்தமிழின் ஏடுகளைக் கல்லரித்துக் கழுவிக் காலத்தாலழியாது சொல்லெலித்துச் சரிக்கும் சுரங்கமென நூலாக்கிப் புல்லரிக்கச்…

மேலும்

புகைப்படத்தொகுப்பு

காணொளித்தொகுப்பு